சூரியுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது மணிரத்னம் இயக்கும் 'தக் லைப்' படத்தில் நடித்து வருகிறார்.

Update: 2024-12-07 03:51 GMT

சென்னை,

பிரபலமான மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழில் விஷாலின் "ஆக்சன்" படம் மூலம் அறிமுகமானார். 'ஜெகமே தந்திரம்' படத்தில் தனுசுடன் நடித்து இருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2' ஆகிய படங்களில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர்.

இந்த நிலையில் இவர் தற்போது தமிழில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்க உள்ளார். இந்த படத்தை 'விலங்கு' வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தை 'கருடன்' திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இத்திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவடைந்ததும், புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்