'வருத்தமாக உள்ளது' - 'மிஸ் யூ' படம் தள்ளிப்போனது பற்றி பேசிய நடிகை ஆஷிகா
புயல் எச்சரிக்கை காரணமாக 'மிஸ் யூ' திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்தது.;
சென்னை,
கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாத். இவர் கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கிரேசி பாய்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தற்போது இவர் தமிழில், கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படத்திலும், சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ் யூ' படத்திலும் நடிக்கிறார். இதில், மிஸ் யூ திரைப்படம் நவம்பர் 29-ம் தேதி அதாவது நேற்றே திரையரங்குகளில் வெளியாக இருந்தது.
ஆனால், தமிழ்நாடு அரசு விடுத்த புயல் எச்சரிக்கை காரணமாக 'மிஸ் யூ' திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்தது. மேலும் 'மிஸ் யூ' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்தது
இந்நிலையில், புயல் காரணமாக 'மிஸ் யூ' படம் தள்ளிப்போனது பற்றி நடிகை ஆஷிகா ரங்கநாத் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'நிச்சயமாக, எனக்கு வருத்தம் உள்ளது. இருந்தாலும், எல்லாமே சிறப்பாக நடக்கும் என்று நம்புகிறேன். இதைவிட நல்ல ரிலீஸ் தேதி கிடைக்கும், அது அதிகமான மக்களைச் சென்றடைய உதவும். எனவே இந்த முடிவு சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.