நடிகை எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் தம்பதிக்கு ஆண் குழந்தை

நடிகை எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.;

Update:2025-03-25 09:35 IST
Actress Amy Jackson and Ed Westwick welcome baby boy

சென்னை,

லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்சன். தமிழில் 'மதராசபட்டினம்' படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உள்பட படங்களில் நடித்தார்.

இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை எமி நிச்சயதார்த்தம் செய்தார். இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனவும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆனால், திருமணத்திற்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

பின்னர் எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், நடிகை எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் என பெயர் சூட்டியுள்ளனர்.

இதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இருவருக்கும் பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்