திருமண புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அதிதி ராவ்

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானாவில் திருமணம் செய்து கொண்டனர்.;

Update:2024-11-28 13:33 IST

சென்னை,

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'பிரஜாபதி' மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அதிதி.2017-ல் வெளியான 'காற்று வெளியிடை' படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார். 'செக்க சிவந்த வானம்', 'சைகோ' படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.

இதற்கிடையில் நடிகர் சித்தார்த், 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியுடன் இணைந்து நடித்தார். அந்த படத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, பட விழாக்களுக்கு இருவரும் ஒன்றாகச் செல்வதும் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருந்தனர்.

பின்னர், தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி ஸ்ரீ ரங்கநாயக சாமி கோவிலில் செப்டம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இயக்குனர் மணிரத்னம், கமல்ஹாசன் மற்றும் மணமக்களின் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் தற்போது, நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் தங்களின் திருமண புகைப்படங்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்