பிரபல நடிகருக்கு அரியவகை நோய் பாதிப்பு..? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மறதி மற்றும் பொருட்களை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும் என்ற கவனம் இல்லாமல் இருப்பார்கள்.

Update: 2024-05-28 12:33 GMT

திருவனந்தபுரம்,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் 'ஆவேஷம்'. இப்படத்தை ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பகத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது. ரூ.150 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

அடுத்ததாக ஜித்து ஜோசப் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பகத் பாசில் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த குழந்தைகளுடன் நேரத்தை கழித்தார்.

அப்போது பகத் பாசில் அங்கு வந்த ஒரு மருத்துவரிடம், "ஏடிஎச்டி எனப்படும் கவனம் குறைபாடு ஹைபராக்டிவிட்டி கோளாறு எளிதில் குணப்படுத்தக் கூடியதா?" என்று கேட்டார்.

அதற்கு மருத்துவர், "சிறுவயதில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம்" என்று பதிலளித்திருக்கிறார். உடனே, பகத் பாசில், "அப்போது 41 வயதில் கண்டறிந்தால் குணப்படுத்துவது கடினமா? எளிதா?" என்று பகத் கேட்டிருக்கிறார்.

இதனால், பகத் ஏடிஎச்டி எனப்படும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மறதி மற்றும் பொருட்களை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும் என்ற கவனம் இல்லாமல் இருப்பார்கள். பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் இந்தவகை அரிய நோய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்