55-வது இந்திய திரைப்பட விழா: 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் தேர்வு

கோவாவில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவில் தமிழ்ப் படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரையிட தேர்வாகியுள்ளது.

Update: 2024-10-25 10:48 GMT

கோவாவில் வரும் நவம்பர்20 முதல் 28ம் தேதி வரை இந்திய திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. முதல் படமாக ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்கர் படம் திரையிடப்படுகிறது. இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் 20 திரைப்படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது.

இதில் தமிழில் இருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மட்டுமே தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உருவானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் ஒரே படமாக நடிகை நிவேதா தாமஸ் நடித்த '35 சின்ன விஷயம் இல்ல' படம் தேர்வாகியுள்ளது. நிவேதா தாமஸ். நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர்.

மலையாளத்தில் 3 படங்கள் தேர்வாகியுள்ளன. அமலா பால் - ஆசிப் அலியின் லெவல் கிராஸ், மம்மூட்டியின் பிரம்மயுகம், பிருத்விராஜின் ஆடுஜீவிதம் படங்களும் தேர்வாகியுள்ளன. இதேபோல ஆவண குறும்படங்களும் 20 படங்கள் தேர்வாகியுள்ளன.

வணிக சினிமா பிரிவில் 12த் பெயில், மஞ்சுமெல் பாய்ஸ், கல்கி 2898 ஏடி, ஸ்வார்கரத், கர்கானு ஆகிய படங்களும் தேர்வாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்