ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 29 இந்திய திரைப்படங்கள் - பட்டியல் இதோ!

ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்காக 6 தமிழ் படங்கள் உள்பட 29 இந்திய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Update: 2024-09-23 11:08 GMT

மும்பை,

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த விழா நடைபெறுகிறது.

அதன்படி 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி (இந்திய தேதிபடி மார்ச் 3) நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் 2025-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்காக 6 தமிழ் படங்கள் உள்பட மொத்தம் 29 இந்திய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அந்த பட்டியல் பின்வருமாறு:

1. வாழை (தமிழ்)

2. தங்கலான் (தமிழ்)

3. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (தமிழ்)

4. மகாராஜா (தமிழ்)

5. கொட்டுக்காளி (தமிழ்)

6. ஜமா (தமிழ்)

7. ஆல் வி இமேஜின் அஸ் லைட் (மலையாளம்)

8. ஆடுஜீவிதம் (மலையாளம்)

9. உள்ளொழுக்கு (மலையாளம்)

10. ஆட்டம் (மலையாளம்)

11. மங்களவாரம் (தெலுங்கு)

12. கல்கி 2898 ஏடி (தெலுங்கு)

13. அனுமான் (தெலுங்கு)

14. லாப்டா லேடீஸ் (இந்தி)

15. சோட்டா பீம் அண்ட் தி கர்ஸ் ஆப் தம்யான் (இந்தி)

16. குட் லக் (இந்தி)

17. கில் (இந்தி)

18. அனிமல் (இந்தி)

19. ஸ்ரீகாந்த் (இந்தி)

20. சந்து சாம்பியன் (இந்தி)

21. ஜோரம் (இந்தி)

22. சாம் பகதூர் (இந்தி)

23. ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர் (இந்தி)

24. ஆர்டிகிள் 370 (இந்தி)

25. மைதான் (மராத்தி)

26. காரத் கணபதி (மராத்தி)

27. ஸ்வார கந்தர்வா வீர் பாட்கே (மராத்தி)

28. காத் (மராத்தி)

29. ஆபா (ஒடியா) ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.



 


Tags:    

மேலும் செய்திகள்