உக்ரைன் 2 ஆண்டுகளில் உலக வரைப்படத்திலிருந்து காணாமல் போகலாம் - ரஷியா முன்னாள் அதிபர் எச்சரிக்கை
“உக்ரைன் இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலக வரைப்படத்திலிருந்து காணாமல் போகலாம்” என்று ரஷிய முன்னாள் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியாவின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், உக்ரைன் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து டிமிட்ரி மெத்வதேவ் கூறியதாவது,
“உக்ரைன் தனது முதலாளிகளிடமிருந்து வரும் 2 ஆண்டுகளில் டெலிவரிக்கான கட்டணத்துடன் எல்என்ஜியைப் பெற விரும்புகிறது என்று ஓர் அறிக்கையைப் பார்த்தேன். உக்ரைனின் இந்தத் திட்டம் உடைந்து விடும். முதலில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக வரைபடத்தில் உக்ரைன் இருக்குமா? அமெரிக்கர்களுக்கு அதை பற்றி கவலையில்லை. அவர்கள் 'ரஷியா எதிர்ப்பு' திட்டத்தில் மிகவும் முதலீடு செய்கிறார்கள், மற்ற அனைத்தும் அவர்களுக்கு ஒன்றுமில்லை” என்றார்.
Update: 2022-06-16 10:00 GMT