உக்ரைன் நெருக்கடியை தீர்க்க உதவ தயார் - சீன அதிபர்... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் நெருக்கடியை தீர்க்க உதவ தயார் - சீன அதிபர் ஜின்பிங்


உக்ரைன் நெருக்கடியை தீர்க்க உதவ தயார் - சீன அதிபர் ஜின்பிங்

உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜின்பிங் நேற்று ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க உதவும் ‘ஆக்கப்பூர்வமான பங்கை’ வகிக்க சீனா தயாராக இருப்பதாக புதினிடம் ஜின்பிங் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒரு பொறுப்பான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதன் மூலம் உக்ரைன் நெருக்கடியின் சரியான தீர்வுக்கு ஊக்கமளிக்க வேண்டும். சீனா தனது ஆக்கபூர்வமான பாத்திரத்தை தொடர்ந்து செய்ய தயாராக உள்ளது.

உலக அளவில் அமைதியைப் பாதுகாப்பதில் நாங்கள் தீவிரமாகப் பங்களிக்கிறோம். அதேபோல், உலகில் நிலையான பொருளாதார ஒழுங்கைப் பேணுவதற்கு நாங்கள் பங்களிக்கிறோம் என்று ஜின்பிங் கூறினார்.

ரஷியாவின் நெருங்கிய கூட்டாளியான சீனா, போர் தொடங்கியதில் இருந்து ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பை கண்டிக்க உறுதியாக மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Update: 2022-06-15 21:52 GMT

Linked news