வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர்,... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு அமெரிக்கா ரூ.3,500 கோடி ராணுவ உதவி
வாஷிங்டன்,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், 122-வது நாளை எட்டியது. இந்தப் போரில் உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.
அந்த வகையில் இப்போதும் 450 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3500 கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதற்காக அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்த ராணுவ உதவியில் 4 பீரங்கி ராக்கெட் அமைப்புகள், 18 தந்திர உபாய வாகனங்கள், 1,200 கையெறி குண்டு லாஞ்சர்கள், 2 ஆயிரம் எந்திர துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்கும். இதற்கிடையே போரில் கிழக்கு உக்ரைனில் சீவீரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகளால் சுற்றி வளைக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் உக்ரைன் படைகள் பின்வாங்கப்போவதாக பிராந்திய கவர்னர் செர்கி ஹைடாய் அறிவித்துள்ளார்.
Update: 2022-06-25 00:17 GMT