வாஷிங்டன், கடந்த 2020-ம் ஆண்டு ஜனாதிபதியாக... ... மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார் டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்,

கடந்த 2020-ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடனின் பதவிகாலம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக ஆயத்த பணிகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டது.

ஜனாதிபதி வேட்பாளர்களாக ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். பல கட்சி வேட்பாளர்கள் போட்டியில் இருந்தாலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக கமலா ஹாரிஸ்-டிரம்ப் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

கருத்துக்கணிப்புகளிலும் யாரை யார் முந்துகிறார்கள் என்பதும் கணித்து கூறமுடியாத அளவுக்கு இருந்தது. அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. எலெக்ட்ரோல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.

அமெரிக்காவில் 16 கோடியே 50 பேர், வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள். இதில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். அவர்கள் தபால் மூலமும், இ-மெயில் மூலமும் வாக்களித்து இருந்தனர்.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று தொடங்கியது. அமெரிக்காவை பொறுத்தவரை 4 வகையான நேரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட சில மாகாணங்களில் காலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று மாலை 5 மணிக்கு) வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல் பென்சில்வேனியா, ஜார்ஜியாவில் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.35 மணிக்கும், அரிசோனாவில் மாலை 6.30 மணிக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்களிக்கும் மையங்களுக்கு மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். அங்கு வாக்குச்சீட்டு முறை இருப்பதால், வாக்காளர்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அந்த சீட்டை ஓட்டுப்பெட்டியில் போட்டனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

ஒருசில பகுதிகளில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. பெரும்பாலான மாகாணங்களிலும் காலை 8 மணிக்கு முடிவடையும். ஒரு சில பகுதிகளில் மட்டும் சற்று தாமதமாகும் என்று தெரிகிறது.

இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி மற்றும் முன்னிலை நிலவரங்கள் வரத் தொடங்கியுள்ளன.

இதன்படி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

வெர்மாண்ட், மாசசூசெட்ஸ், ரோட் ஜலாண்ட், கஜெக்டிகட் உள்ளிட்ட இடங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

இண்டியானா, கெண்டக்கி, அலபாமா, மிஸ்ஸிசிபி , புளோரிடா உள்ளிட்ட இடங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்படி 54 சதவீத வாக்குகளுடன் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். 45 சதவீத வாக்குகளுடன் கமலா ஹாரிஸ் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

முன்னணி நிலவரம் :

டொனால்டு டிரம்ப் - 95 ( 95 இடங்களில் முன்னிலை, 9 மாகாணங்களில் வெற்றி)

கமலா ஹாரிஸ் - 35 (35 இடங்களில் முன்னிலை, 4 மாகாணங்களில் வெற்றி)

Update: 2024-11-06 01:52 GMT

Linked news