ரஷிய படையெடுப்பு; உக்ரைனின் பாதுகாப்புக்கு நவீன ஏவுகணையை வழங்க அமெரிக்கா முடிவு

கீவ்,

ரஷியாவின் 4 மாத கால படையெடுப்பில் உக்ரைனின் பாதுகாப்புக்கு உதவுவதற்காக தரையில் இருந்து வானில் சென்று தாக்கும் நவீன ஏவுகணையை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் பைடன், ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜெர்மனிக்கு சென்றுள்ளார். இதில், இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளும் கலந்து கொள்கின்றன. உக்ரைனுக்கு ஆதரவான சில விசயங்களை பைடன் வெளியிட கூடும் என கூறப்பட்டது.

இந்நிலையில், உக்ரைனின் பாதுகாப்புக்கு உதவுவதற்காக தரையில் இருந்து வானில் சென்று தாக்கும் நவீன ஏவுகணையை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என நெருங்கிய வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

நார்வே நாட்டில் உருவான, விமானங்களை அழிக்கும், நடுத்தர முதல் தொலைதூர தாக்குதலில் ஈடுபடும் ஏவுகணைகளை அமெரிக்கா வாங்கி வருகிறது. அவை, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகை மற்றும் கேபிடால் கட்டிடம் ஆகியவற்றின் வான்வழி மேற்பரப்பு பாதுகாப்புக்கான பயன்பாட்டுக்காக உள்ளது.

இந்நிலையில், இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அதிபர் பைடன் முடிவு செய்து அதுபற்றிய அறிவிப்பினை வெளியிட உள்ளார். இதுதவிர, கூடுதலாக உக்ரைனிய ராணுவத்திற்கு தேவையான வெடிபொருட்கள், ரேடார்கள் உள்ளிட்டவற்றை உதவியாக வழங்கவும் முடிவாகி உள்ளது என கூறப்படுகிறது.

Update: 2022-06-27 06:05 GMT

Linked news