கோவை: மருதமலை முருகன் கோவிலுக்கு பிப்.20-ஏப்.06ம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
கோவை: மருதமலை முருகன் கோவிலுக்கு பிப்.20-ஏப்.06ம் தேதி வரை கார்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. பிப்.20-ஏப்.06ம் தேதி வரை செவ்வாய், ஞாயிறு, கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பைக்கில் செல்ல அனுமதியில்லை. மலைப்படிகள் வழியாகவும், கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஏப்.04ம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Update: 2025-02-18 13:35 GMT