உக்ரைன் போரில் நீண்ட காலமாக தலைநகர் கீவ் மீதான... ... உக்ரைன் போர் #லைவ் அப்டேட்ஸ்: மனிதகுலத்தை அழிவிற்கு அழைத்து செல்லாதீர்கள் ; போப் பிரான்சிஸ்
உக்ரைன் போரில் நீண்ட காலமாக தலைநகர் கீவ் மீதான தாக்குதலை ரஷிய படைகள் நிறுத்தி வைத்திருந்தன. ஆனால் நேற்று காலையில் கீவ் நகர் மீது மீண்டும் ரஷிய படைகள் தாக்குதலை தொடுத்தன. ரஷிய படைகளின் ஏவுகணை தாக்குதல்களால் ஏராளமான கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக டேர்னிட்ஸ்கி மற்றும் டினிப்ரோவ்ஸ்கி மாவட்டங்களில் கரும்புகை மண்டலங்கள் உருவாகின.
ஏவுகணை தாக்குதலின்போது ரஷிய படைகள் சைரன் களை ஒலிக்கவிடவில்லை.
தலைநகரையும், பிற நகரங்களையும் விட்டு விட்டு கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி வந்த ரஷியா, மீண்டும் கீவ் மீது தாக்குதல் நடத்தி இருப்பது, இன்னும் அந்த நகர் மீது தாக்குதல் நடத்தும் திறனையும், விருப்பதையும் ரஷியா கொண்டிருப்பதையே காட்டுவதாக சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த ஏவுகணை தாக்குதலில் உயிர்ப்பலி எதுவும் நேரிட்டதாக தகவல் இல்லை. ஒருவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கீவ் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய டாங்குகள் மற்றும் பிற கவசங்கள் உள்ளிட்ட தளவாடங்களை அழித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.