புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது - பிரதமர் மோடி உரை

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடங்கியது. அப்போது பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் நாடாளுமன்றம், செங்கோல் குறித்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.

அதன் பின்னர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

“புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது. நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப் பயணத்திலும் அழியாத சில தருணங்கள் வருகின்றன. மே 28 அத்தகைய நாள். புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும். புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல, 140 கோடி இந்திய மக்களின் லட்சியத்தின் சின்னம். இது இந்தியாவின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகிற்கு வழங்குகிறது” என்று கூறினார்.

Update: 2023-05-28 07:40 GMT

Linked news