பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி - கின்னஸ் சாதனை படைத்தது

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கோரோசி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஐ.நா.சபை வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா செய்தார். பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், யோகா ஆசிரியர்கள் உள்பட சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்று யோகா செய்தனர்.

இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சி, ‘அதிக நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி’ என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. 

Update: 2023-06-21 14:16 GMT

Linked news