நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு ... ... நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 49 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து, 58 தொகுதிகளுக்கு இன்று 6ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்குவங்காளத்தில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. அதேபோல், ஒடிசா மாநில சட்டசபைக்கு 42 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்நிலையில், வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் இருப்பதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.