ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தில் மீட்புப் பணிகளில்... ... ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம்

ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் அர்ப்பணிப்புக்கும் பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் உண்மையிலேயே ஊக்கமளிப்பவை. ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்தவுடன், மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஏராளமானோர் ரத்ததானம் செய்ய வரிசையில் நின்றனர்.

ரயில்வே, NDRF, ODRAF, உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு சேவை, தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பலர் அயராது உழைத்து மீட்புப் பணிகளை வலுப்படுத்திய ஒவ்வொரு நபரையும் நான் பாராட்டுகிறேன். தங்களின் அர்ப்பணிப்புக்கு பெருமைப்படுகிறேன்.

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்துக்கு உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகளால் ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது. தங்களின் அன்பான வார்த்தைகள், துயருற்றிருக்கும் குடும்பங்களுக்கு வலிமை தரும். தங்களின் ஆதரவுக்கு நன்றி” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 

Update: 2023-06-03 17:53 GMT

Linked news