பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு பதிலுரை
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தின் மீது இன்று 3-வது நாளாக மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. நிர்மலா சீதாராமன் தற்போது விவாதத்திற்கு பதிலளித்து வருகிறார். பிரதமர் மோடி இன்று விவாதத்திற்கு பதிலளிப்பார் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், இன்று மாலை 4 மணிக்கு பிரதமரின் பதிலுரை தொடங்கும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன
Update: 2023-08-10 07:08 GMT