தென்னையின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு
2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தமிழ்நாட்டு சமையலில் தேங்காய்க்கு பெரும்பங்கு உண்டு. தென்னையின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தவும், தென்ன்னை வளர்ச்சி வாரிய திட்டத்தில், வரும் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் குறித்த செயல் விளக்கத்திடல்கள் பத்தாயிரம் ஹெக்டர்கள் பரப்பில் நடத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார். மண்டல தென்னை நாற்றுப் பண்ணைகளை தோற்றுவித்தல், எருக்குழி தோற்றுவித்தல், மறுநடவு – புத்தாக்கத் திட்டம் 20 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.
குட்டை –நெட்டை வீரிய ஒட்டு ரக தென்னைக்கு அதிக தேவை இருப்பதால், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்னை நாற்றுப் பண்ணிகளைல் கூடுதலாக 10 ஆயிரம் குட்டை – நெட்டை வீரிய ஒட்டு ரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.