கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்

2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

"சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கழிவிலிருந்து, மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு"

மாடு, ஆடு, தேனி வளர்ப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள ரூ.50 கோடி நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்

"கேள்வரகு, கம்பு ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்வது உறுதி செய்யப்படும்"


Update: 2023-03-21 05:40 GMT

Linked news