பெங்களூருவில் மகா சிவராத்திரி: வாழும் கலை... ... நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டம்..!! - கோவை ஈஷா யோகா மையத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

பெங்களூருவில் மகா சிவராத்திரி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சிறப்பு பூஜை



பெங்களூருவில் நேற்று இரவு முதல் மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனின் அருளை பெற்று சென்று வருகின்றனர். மல்லேசுவரத்தில் காடு மல்லேசுவரம் கோவில் உள்ளது. 17-ம் நூற்றாண்டை சார்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி நாளில், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும்.

நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் அதிகாலை முதலே விஷேச பூஜைகள் நடைபெற்றன. கோவில் முகப்பு பகுதியில் பூக்களால் ஆன 15 அடி உயர சிவ லிங்கம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை தரிசித்து சென்றனர்.

மேலும் பல்வேறு கோவில்களில் நேற்று விஷேச பூஜைகள், இரவு 4 கால பூஜைகள் நடைபெற்றன. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலரும் விரதம் இருந்து சிவனின் அருளை பெற்று சென்றனர்.

இந்நிலையில் பெங்களூரு மையத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இந்த மகா சிவராத்திரி சிறப்பு பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் பங்கேற்றார். 



Update: 2023-02-18 19:37 GMT

Linked news