தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. காலை முதல் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
வாக்களித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு,
நாட்டு மக்கள் இந்த தேர்தலில் தெளிவான தீர்ப்பு வழங்க உள்ளனர். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கடந்த மூன்று ஆண்டு நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கும் விதமாக இந்த தேர்தல் முடிவு இருக்கும். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கு ஆதரவாக காலை முதல் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். மத்தியில் இந்த தேர்தலின் முடிவு பெறும் மாற்றத்தை கொண்டு வரும்
இவ்வாறு அவர் கூறினார்.