ஜனநாயக கடமையாற்றிய உலகின் உயரம் குறைவான பெண்.... ... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு

ஜனநாயக கடமையாற்றிய உலகின் உயரம் குறைவான பெண்....

மும்பை,

நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. காலை முதலே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகில் உயரம் குறைவான பெண் என்ற சாதனைக்கு சொந்தமான 30 வயதாகும் ஜோதி அம்கே, மராட்டிய மாநிலம் நாக்பூரில் தனது வாக்கினை செலுத்தினார்.

உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் ஜோதி அம்கே. 62.8 செ.மீ. உயரம் மட்டுமே உள்ள இவர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் வசித்து வருகிறார்.

Update: 2024-04-19 05:11 GMT

Linked news