கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில்... ... நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு
கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 14 தொகுதிகளில் மொத்தம் 247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 26 பேர் பெண்கள் ஆவர்.
மத்திய பிரதேசத்தின் 7 தொகுதிகளில் 80-க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு பா.ஜனதா, காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில் முதற்கட்ட தேர்தலில் 12 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 13 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த தொகுதிகளில் 152 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, 2 மத்திய மந்திரிகள், பா.ஜனதா மாநில தலைவர் என முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இங்குள்ள ஜலோர் தொகுதியில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் மகன் வைபவ் களத்தில் உள்ளார். இதைப்போல பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் சிங் போட்டியிடும் ஜலாவர்-பரான் தொகுதியும் தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.