கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்! - பிரதமர் முன்னிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன; இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு; இதனை மேலும் வலிமைப்படுத்த புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது.
அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் தமிழகத்தின் கல்வி திட்டங்கள் உள்ளன, காந்தி கூறிய கொள்கைகள் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்களாக உள்ளன.
வட இந்தியர் அனைவரும் தமிழை கற்க வேண்டும் என்று சொன்னவர் மகாத்மா காந்தி,மகாத்மா காந்தியை அரையாடை கட்டவைத்தது தமிழ் மண்.
யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்வி. அத்தகைய கல்வியை ஒன்றிய அரசு மாநில பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும். அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. எமர்சென்சியின் போது தான் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும் என கூறினார்.