காசாவுக்கு விரையும் மனிதாபிமான உதவிகள் காசாவில்... ... ஹமாசின் டிரோன் தாக்குதல் முறியடிப்பு - இஸ்ரேல் ராணுவம் தகவல்
காசாவுக்கு விரையும் மனிதாபிமான உதவிகள்
காசாவில் ஒரு புறம் தாக்குதல் தீவிரமடையும் நிலையில், மற்றொரு புறமும் அங்கு மனிதாபிமான உதவிகள் விரைந்து வருகின்றன.
போர் தொடங்கிய 15 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் எகிப்தின் ராபா எல்லை வழியாக நிவாரண பொருட்கள் அடங்கிய லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன. அதன் தொடர்ச்சியாக நேற்றும் உயிர்காக்கும் மருந்து மற்றும் நிவாரண பொருட்களுடன் லாரிகள் காசாவுக்குள் சென்றன. குண்டு மழைக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த போரில் இரு தரப்பிலும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2023-10-22 22:53 GMT