ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத், ஹிஸ்புல்லா... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்வு

ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத், ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்களின் தலைவர்கள் சந்திப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 19வது நாளாக நீடித்து வருகிறது. தாக்குதல் நடத்திய ஹமாஸ், பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவினரை குறிவைத்து காசா முனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், போர் மேலும் விரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத், ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்களின் தலைவர்கள் சந்திப்பு இன்று லெபனானில் நடைபெற்றது. லெபனான் தலைநகர் பெரூட்டில் நடந்த சந்திப்பின்போது காசா மற்றும் பாலஸ்தீன மக்களின் உண்மையான வெற்றிக்கான இலக்கு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2023-10-25 11:22 GMT

Linked news