எல்லையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் தகர்க்கப்பட்ட... ... லைவ்: 16வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது...!
எல்லையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் தகர்க்கப்பட்ட இரும்பு வேலிகளை சீரமைக்கும் இஸ்ரேல்
காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தின.
காசாவுடனான எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகளை ராக்கெட்டுகளை வீசியும், புல்டோசர்கள் கொண்டு தகர்த்தும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். அதேபோல், கடல் வழியாகவும், வான்வழியாகவும் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேலில் 1,405 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக போர் அறிவித்த இஸ்ரேல் காசாமுனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காசா எல்லையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் தகர்க்கபப்ட்ட இரும்பு வேலிகளை சீரமைக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இரும்பு வேலிகள் சீரமைக்கப்பட்டு காசா எல்லைப்பகுதியில் பாதுகாப்பை இஸ்ரேல் பலப்படுத்தியுள்ளது.