ஹமாசை ஒழிக்கும் வரை போர் தொடரும் - இஸ்ரேல் சூளுரை ... ... தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 500ஐ கடந்தது
ஹமாசை ஒழிக்கும் வரை போர் தொடரும் - இஸ்ரேல் சூளுரை
இதற்கு முன்னரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 முறை போர் ஏற்பட்டது. ஆனால் அந்த போர்கள் இந்த அளவுக்கு பாதிப்பை சந்தித்ததில்லை.
அதற்கு காரணம் போர் தொடங்கிய சில நாட்களிலேயே ஏதேனும் ஒரு தரப்பு சண்டை நிறுத்தத்தை அறிவிக்க, மற்றொரு தரப்பு அதை ஏற்று தாக்குதலை கைவிடும்.போர் முடிவுக்கு வந்துவிடும்.
ஆனால் இந்த முறை இருதரப்புமே தங்களின் இலக்கை எட்டும் வரை போர் தொடரும் என கூறி தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக ஹமாசை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தபோவதில்லை என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.
அதற்கு ஏற்றபடி காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. வடக்கு, தெற்கு மற்றும் மத்திய காசா என அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகின்றன.
6,500 பேர் பலி; 17,500 பேர் படுகாயம்
24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 750 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், சிறுவர்கள் என கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை மட்டுமே குறிவைப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், தாக்குதல்களில் காசா மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படுகின்றனர். இதனால் முந்தைய போர்களில் இல்லாத அளவுக்கு உயிரிழப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை காசாவில் 6,500-க்கும் அதிகமானோர் பலியானதாக காசா சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
மேலும் சுமார் 17,500 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 1,600-க்கும் அதிகமானோர் கட்டிட இடிபாடுகளில் புதைந்து மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.