உக்ரைன் போரில் ரஷியாவிடம் இங்கிலாந்து நாட்டின்... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் நகரில் காலரா பரவும் ஆபத்து..!!
உக்ரைன் போரில் ரஷியாவிடம் இங்கிலாந்து நாட்டின் ஐடன் அஸ்லின் (வயது 28), ஷான் பின்னர் (48) மற்றும் மொராக்கோவின் சவுதின் பிராகிம் ஆகிய 3 பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்கள் கூலிப்படையினர் என கூறி, பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டொனெட்ஸ்க் கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த உத்தரவு வெட்கக்கேடானது என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி லஸ் டிரஸ் சாடி உள்ளார். இது ஜெனீவா உடன்பாடுகளை மீறிய செயல் என்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தி தொடர்பாளர் ஜேமி டேவிஸ் கூறி உள்ளார்.
Update: 2022-06-10 21:55 GMT