உக்ரைன் போரால், ரஷியாவின் கட்டுப்பாட்டில் போய்... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் நகரில் காலரா பரவும் ஆபத்து..!!


உக்ரைன் போரால், ரஷியாவின் கட்டுப்பாட்டில் போய் விட்ட துறைமுக நகரமான மரியுபோலில் தற்போது ஏறத்தாழ 1 லட்சம் பேர் உள்ளனர். அங்குள்ள பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூட கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அங்கு காலரா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “ரஷியா தான் ஆக்கிரமித்துள்ள மரியுபோலில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர போராடுகிறது. பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. தொலைபேசி மற்றும் இணைய சேவைகளில் பெரும் இடையூறு தொடர்கிறது. உக்ரைனில் 1995-ம் ஆண்டில் காலரா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது மே மாதம் முதல் காலரா பாதிப்பு பதிவாகி வருகிறது. காலரா பெருமளவில் வெடிக்கிற ஆபத்து உள்ளது.” என தெரிவித்துள்ளது.

Update: 2022-06-10 21:05 GMT

Linked news