அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: மீண்டும் வயநாட்டிற்கு... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட்
நாளை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி காசர்கோடு, கண்ணூரர்,கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
மேலும், வட கேரளாவில் கனமழைக்கான தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்கள் கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலப்புரம்,பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2024-07-31 15:53 GMT