முக்கிய மசோதாக்கள் கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன - மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றி வருகிறார் அதில்,
மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. மக்களவையில் 3 நாட்களாக விவாதங்களை கவனித்து வருகிறேன்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன். முக்கிய மசோதாக்கள் கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை. இந்திய நாட்டின் இளைஞர்களை பற்றி எதிர்க்கட்சிகளுக்கு கவலை இல்லை.
மத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் எங்கள் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளனர்.
2024-ம் ஆண்டு தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும். எவற்றில் எல்லாம் அரசியல் செய்யக்கூடாதோ அவற்றில் எல்லாம் அரசியல் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் மீது அக்கறை இல்லை. அதிகாரத்தின் மீதே ஆசை.
எதிர்க்கட்சிகள் ‘நோ பால்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.நாங்கள் சதம் மற்றும் சிக்ஸ் அடித்துக் கொண்டிருக்கிறோம்; ஒருமுறை ‘நோ பால்’ போட்டால் பரவாயில்லை, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப ‘நோ பால்’ போடுகிறார்கள் என்றார்.