இஸ்ரேல் பிரதமரை சந்தித்த அமெரிக்க வெளியுறவு... ... இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்
இஸ்ரேல் பிரதமரை சந்தித்த அமெரிக்க வெளியுறவு மந்திரி
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் நேட்டன்யாகுவிடம், "என்னுடன் நான் கொண்டு வந்துள்ள செய்தி இதுதான். உங்களை தற்காத்து கொள்ளும் அளவுக்கு நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அமெரிக்கா இருக்கும் வரை நீங்கள் தனியாக போராட வேண்டிய அவசியமில்லை. போர் சூழலை பயன்படுத்தி யாராவது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் பார்த்துகொண்டு இருக்க மாட்டோம்" என கூறினார்.
Update: 2023-10-12 20:18 GMT