ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமான செய்தியறிந்து... ... காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் - விஜய் இரங்கல்

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

"மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய ஜவுளித்துறை இணை மந்திரியும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்."

Update: 2024-12-14 06:56 GMT

Linked news