மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட பிரதமர்... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!
மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட பிரதமர் மோடி..!
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் பட்டங்கள் பெறும் மாணவர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார்.
Update: 2024-01-02 05:18 GMT