பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை: பிரதமர் மோடி... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!

பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை:

பிரதமர் மோடி இன்று திருச்சி வர உள்ளார். தனி விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா:

திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி பின்னர் கார் மூலம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

திருச்சி புதிய விமான நிலைய முனையம் திறப்பு:

பயணிகளுக்கான வசதியை மேம்படுத்துவதற்காக திருச்சி விமான நிலையத்தை ரூ.1,200 கோடியில் மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ளது. இந்த புதிய விமான முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், திருச்சி புதிய விமான முனைய திறப்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய விமான முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

ரூ. 19 ஆயிரம் கோடியில் திட்டப்பணிகள்:

ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கியும் வைக்கிறார்.

கவர்னர், முதல்-அமைச்சர் பங்கேற்பு:

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் திருச்சி புதிய விமான நிலைய முனையம் திறப்பு, புதிய திட்டப்பணிகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு நிகழ்ச்சிகளில் கவர்னர் ஆர்.என். ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

Update: 2024-01-02 02:38 GMT

Linked news