கவர்னர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும் - திமுக... ... தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்: இளைஞரணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

கவர்னர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும் - திமுக இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். அப்போது இளைஞரணி மாநாட்டிற்கு அனுமதி அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:-

* பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிரான பரப்புரையை திமுக இளைஞர் அணி முன்னெடுக்கும்

* கவர்னர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும்.

* கல்வி, மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். 

* நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யும் வரை திமுக போராடும். நீட் தேர்வு விலக்கில் உறுதியாக வெற்றி பெற்றே தீருவோம்.

* விசாரணை புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி மத்திய அரசு விடும் மிரட்டலுக்கு கடும் கண்டனம்.

* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

* பாஜக ஆட்சியை வீழ்த்திடவே திமுக இளைஞரணி செயல்படும்.

* ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

* குலக்கல்வியை எதிர்த்து இளைஞர் அணி போராட்டம் தொடரும்.

* பல்கலைக்கழக வேந்தராக கவர்னருக்கு பதிலாக முதல்-அமைச்சர் செயல்பட வேண்டும்.

Update: 2024-01-21 04:57 GMT

Linked news