மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஆனார் டொனால்டு... ... மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார் டொனால்டு டிரம்ப்
மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஆனார் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதாக பாக்ஸ் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி வெற்றிக்கு தேவையான 270 இடங்களை கடந்து கூடுதலாக பெற்று டிரம்ப் முன்னிலை வகிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2016-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த டிரம்ப் 2020-ம் ஆண்டு ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். 2020-ம் ஆண்டு தோல்விக்கு பின் மீண்டும் களமிறங்கிய டிரம்ப் நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
கொண்டாட்டம்
டிரம்பின் வெற்றியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 267 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் - (51.2 சதவீதம் வாக்குகள்)
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 224 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார். - (47.4 சதவீதம் வாக்குகள்)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை.
அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் அவைகளை தக்கவைத்துள்ள குடியரசுக் கட்சி
குடியரசு கட்சி 51-49 என்ற பெரும்பான்மையை உறுதி செய்துள்ளது. வெஸ்ட் வெர்ஜீனியா, ஒகாயோ மாநிலங்களில் வெற்றி பெற்றதால் செனட் சபை குடியரசுக் கட்சியின் வசம் சென்றுள்ளது.
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளநிலையில், அவர் நீதிபதிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் நியமிப்பதற்கு செனட் சபையில் உள்ள குடியரசுக் கட்சியினரால் உதவமுடியும்.
அடுத்தடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாகி வருவதால் மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.