2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 2-ம் கட்டமாக கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களின் 88 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஒருசில அசம்பாவிதங்கள் தவிர்த்து 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவைத்தொகுதிகளுக்கான ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 14- முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
ராஜஸ்தான் - 13, மராட்டியம் -8, உத்தர பிரதேசம் -8, மத்திய பிரதேசம் - 6, மேற்கு வங்காளம் - 3, அசாம் - 5, பீகார் -5 , சத்தீஸ்கார் -3, ஜம்மு, மணிப்பூர், திரிபுராவில் தலா ஒரு தொகுதியில் தேர்தல் நிறைவு பெற்றது. மணிப்பூரில் உள்ள உக்ரூல் மாவட்டத்தில் 2 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. தொடர்ந்து, 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.