ஆசியா விளையாட்டு போட்டிகள்: கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்...!

ஒலிம்பிக்கிற்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஹாங்சோவ் நகரில் உள்ள தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஸ்டேடியத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு துவக்க விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் கலந்துகொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆசிய போட்டிகளை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 

Update: 2023-09-23 12:28 GMT

Linked news