முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி... ... ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழா கோலாகலம்: பிரபலங்கள் பங்கேற்பு

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. மராட்டிய மாநிலம் மும்பையிலுள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டர் இந்த திருமணம் தொடர்பான சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் தங்களது இளைய மகனின் திருமணத்திற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதாவது, உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

தனது மகனின் திருமணத்திற்காக மட்டும் பல லட்சக்கணக்கான கோடிகளை அம்பானி செலவழித்து வருகின்றார். மேலும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் வீட்டுக் கல்யாணம் என்பதால் வெளிநாட்டில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் அனைத்து பிரபலங்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Update: 2024-07-12 15:56 GMT

Linked news