எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே... ... 28-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் - அமைச்சர் ரகுபதி விளக்கம்
செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் ரகுபதி , “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்
இணைய வழியில் நிர்வகிக்கும் சி.சி.டி.என்.எஸ் (CCTNS) அமைப்பின் தொழில்நுட்பக் கோளாறே காரணம். காவல்துறை காரணம் இல்லை. அண்ணா பல்கலை. விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும். சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு பற்றிய சென்னை காவல்துறை ஆணையரின் பேட்டி பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை, அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன்படி கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் எந்த தவறும் இல்லை’ என்று அவர் கூறினார்.
Update: 2024-12-28 13:34 GMT