சென்னை மதுரவாயலில் கல்லூரி உதவி பேராசிரியர்... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

சென்னை மதுரவாயலில் கல்லூரி உதவி பேராசிரியர் பிரகார் குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வீட்டின் கழிவறையில் தலையில் கவர் சுற்றியபடி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.பேராசிரியர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிஎம்பிடி போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையா? அல்லது த*கொலையா? என சிஎம்பிடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரகார்குமார் ஆவார். பேராசிரியர் உடன் நெருக்கமாக பழகியவர்களிடம் விவரங்களை போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

Update: 2024-12-23 05:09 GMT

Linked news