பட்ஜெட் எதிரொலி: அதிரடியாக குறைந்த தங்கம் விலை

மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-23 09:54 GMT

புதுடெல்லி,

2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதையடுத்து தங்கம் விலை நேற்றைய விலையில் இருந்து அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பட்ஜெட் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலை தற்போது சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.6,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.92.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்