தங்கம் விலை சற்று குறைவு...இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

Update: 2024-09-17 04:56 GMT

File image

சென்னை,

தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் விலையும் மளமளவென சரிந்தது. விலை குறைந்து கொண்டே வந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. உயரும்போது அதிக அளவில் உயர்வதும், சரியும்போது சொற்பமாக சரிவதும் என இருந்து வருகிறது. இதையடுத்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.55,040-க்கு விற்று வந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.97.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்