ஓ.பி.எஸ்.க்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் 18-ம் தேதி தீர்ப்பு
அ.தி.மு.க.கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் வரும் 18-ல் தீர்ப்பு வழங்கிறது சென்னை ஐகோர்ட்டு.;
சென்னை,
அ.தி.மு.க. பொதுச் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
எனவே, அ.தி.மு.க. கட்சியின் பெயர், சின்னம், கொடியை அவரும், அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின் மார்ச் 12ல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கில் வரும் 18-ம் தேதி பிற்பகல் 2.15க்கு ஐகோர்ட்டு தீர்ப்பளிக்கிறது.
வழக்கு முடியும்வரை கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.