பாஜக கூட்டணி குறித்து மறுபரிசீலனை - எடப்பாடி பழனிசாமி

Update: 2023-06-13 09:46 GMT

அண்ணாமலை குறித்து ஓரிரு நாட்களில் பாஜக தலைமை முடிவெடுக்கும் என எதிர்பார்க்கிறோம். பாஜக தலைமை முடிவெடுக்காவிட்டால் கூட்டணியை மறுபரிசோலனை செய்வோம் என எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து ஏற்பட்டதாகவும், ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணாமலை குறித்து பாஜக மேலிடத்தில் அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.a

மேலும் செய்திகள்