ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை மந்திரி சென்னையில் மரணம்: மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி

ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை மந்திரி ஜகர்நாத் மஹ்தோ சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Update: 2023-04-06 06:29 GMT

சென்னை,

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். கடந்த நவம்பர் 2020 இல் கொரோனவால் பாதிக்கப்பட்ட பிறகு அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கடந்த மாதம் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், சென்னை அமைந்தகரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஹ்தோ உயிரிழந்துள்ளார்.

ஜகர்நாத் மஹ்தோ மறைவிற்கு ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், எங்கள் புலி ஜாகர்நாத் இப்போது இல்லை, இன்று ஜார்கண்ட் அதன் சிறந்த போராட்டக்காரர், போராட்டவாதி, கடின உழைப்பாளி மற்றும் பிரபலமான தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

மேலும், ஜகர்நாத் மஹ்தோ ஆத்மா சாந்தியடைவதோடு, இந்த நேரத்தில் துயரத்தைத் தாங்கும் சக்தியைக் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஜகர்நாத் மஹ்தோவின் உடலுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்